பல நிபந்தனைகளுடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை

இலங்கைக்கு நிபந்தனை அடிப்படையில் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.மனித உரிமை கண்காணிப்பகம்

கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. குறைந்த வருமானம் ஈட்டுவோரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், ஊழல் மோசடிகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் தற்பொழுது இடம்பெற்று வரும் போராட்டங்களுக்குச் சர்வதேச மனித உரிமை தர நிர்ணயங்களின் அடிப்படையில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மீது அதிகாரங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையிலான ஓர் பொறிமுறைமைக்கு இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.

Exit mobile version