நேற்றையதினம் இரவு 04.04.2022 கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியகுளம் பகுதியில் மூன்று காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்து பயன்தரும் தென்னை மரங்களை அழித்துள்ளன.
தமது காணியில் வாழ்வாதாரத்திற்காக வைக்கப்படு ஐந்து வருடம் கடந்த நிலையிலுள்ள தென்னைகளை இவ்வாறு முற்றாக அழித்து நாசம் செய்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தற்பொழுது கால போக நெற்செய்கை அறுவடை முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தமது குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் வர ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் யானைகளிடமிருந்து பாதுகாப்பிற்காக தமக்கு யானை வெடியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அழிவடைந்த தென்னை பயிர்களுக்கான நட்ட ஈட்டினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.