இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகப்புத்தகத்தின் சுயவிபர புகைப்படத்தினை திடீரென மாற்றியுள்ளார்.
அவரின் புகைப்படத்தில் இலங்கையின் தேசிய கொடியை இணைத்து சுயவிபர புகைப்படத்தினை மாற்றியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அரசுக்கெதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
பொதுமக்களால் நேரலும், சமூக ஊடகங்களிலும் வறுத்தெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் புதிய நடவடிக்கையொன்றாக, தமது பேஸ்புக் சுயவிவரப் படங்களை மாற்றியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடியை, தங்கள் சுயவிவரப் படங்களுடன் இணைத்துள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஏனைய தலைவர்கள் தமது முகநூல் பதிவுகள் தொடர்பில் கருத்துகளை வெளியிடுவதற்கு பொதுமக்களை அனுமதித்துள்ள போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பதிவுகளில் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதை இன்னமும் கட்டுப்படுத்தியுள்ளார்.