லொறியின் மீது கொள்கலன் கவிழ்ந்து விபத்து-ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு கண்டி வீதியின் மாவனல்லை மஹந்தேகம சந்திக்கு அருகில் நேற்று (09) காலை வீதியில் பயணித்த கொள்கலன் பாரவூர்தியின் கொள்கலன் எதிர்திசையில் வந்த லொறியின் மீது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த லொறியின் சாரதி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கெலிஓய பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொள்கலன் சாரதி வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொள்கலன் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version