இன்று நள்ளிரவில் அரசியலில் காத்திருக்கும் பெரும் அதிரடி நடவடிக்கை

நாட்டு மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்றிரவு முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலையில் ஜனாதிபதி உள்ளார் .

இந்நிலையில் நாட்டின் முக்கிய பதவியில் இருக்கும் தனது உறவினர் ஒருவரை அதிரடியாக நீக்கவுள்ளதாக தெரிய வருகிறது. அதற்கு பதிலாக தற்போது நாடாளுமன்றில் ஒரு உறுப்பினர் மட்டும் வைத்துள்ள கட்சியின் கட்சிக்கு அந்தப் பதவி வழங்கவுள்ளதாக தெரிய வருகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திலிருந்து விலகி, சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள பங்காளிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகிய, 41 எம்.பிக்களுக்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு 7 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறே கோரியுள்ளனர்.

இதேவேளை, விமல் வீரவங்ச உள்ளிட்டவர்கள், அதனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version