Home இலங்கை காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகத் தொடரும் போராட்டத்திற்கு சிங்கள ஊடகங்கள் பெயர் வைத்துள்ளனர்

காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகத் தொடரும் போராட்டத்திற்கு சிங்கள ஊடகங்கள் பெயர் வைத்துள்ளனர்

0

மூன்றாவது நாளாக கொழும்பு காலி முகத்திடலில் தொடரும் அரச எதிர்ப்புப் போராட்டத்திற்கு “ஓயாத அலைகள்” என சிங்கள ஊடகங்கள் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கடலோரத்தில் நடைபெறுவதால் சிங்கள ஊடகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு “ஓயாத அலைகள்” (நொநவத்தின ரெல்ல)எனப் பெயரிட்டுள்ளன.

எந்த அரசியல் கட்சியினரதும் ஆதரவு இல்லாமல் சுயேச்சையாக அரசையும், ஜனாதிபதியையும் பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் இளைஞர் யுவதிகள் ஒன்றுதிரண்டு ஆரம்பிக்கப்பட்ட “கோ ஹோம் கோட்டா” ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று காலை மீண்டும் ஆரம்பமான நிலையில் சிங்கள ஊடகங்கள் இவ்வாறு பெயரிட்டுள்ளன.

அதேவேளை விடுதலைப்புலிகள் அரச படைகளுக்கு இடையிலான யுத்தத்தின்போது 1996 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் ஒரு இடத்தை கைப்பற்றுவதற்கு ஓயாத அலைகள் எனப் பெயரிட்டு தமது படையின் நகர்வை ஆரம்பிப்பது வழக்கம்.

அதன்படி “ஓயாத அலைகள்” – 1,”ஓயாத அலைகள் – 2 , என பெயரிட்டு இரண்டு தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version