Home சினிமா சாதனை படைத்த பிரபல தமிழ் நடிகரின் மகன் மகன்

சாதனை படைத்த பிரபல தமிழ் நடிகரின் மகன் மகன்

0

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சிறுவயது முதல் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்றுவந்த, 2022-ம் ஆண்டுக்கான டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின், 1500 மீட்டர் பிரிவின் இறுதிப் போட்டியில் 10 பேர் கலந்துகொண்டனர். இதில், இரண்டாவது இடத்தைப் பிடித்து வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோல் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில், இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இவர்கள் இருவரின் வெற்றியை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மாதவன், கடவுளின் கருணையாலும், அனைவரின் ஆசிர்வாதத்தாலும் இவர்கள் இருவரும் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பயிற்சியாளர் பிரதீப் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version