Home உலகம் இந்தியா விமான நிலைய முதற்கட்டபணிகள் பிப்ரவரி மாதம் நிறைவு

விமான நிலைய முதற்கட்டபணிகள் பிப்ரவரி மாதம் நிறைவு

0

வானூர்தி விமானம் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பிப்ரவரி 2023க்குள் நிறைவடையும் என தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலக வழித்தடத்தின் ஒரு பகுதியாக ஒரு வானூர்தி மையத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள வானூர்தி தொழில் பூங்காவின் அமைவிடத்தில் சிப்காட் நிறுவனம் நிறுவி வருவதாகவும், விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கான உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையம், வானூர்தி மின்னணுவியல் உதிரி பாகங்கள், உற்பத்தி வளாகம், பரிசோதித்து சான்றிதழ் வழங்கும் வசதி, பொது சேமிப்பு கிடங்கு, திறன்மிகு மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் போன்ற வசதிகளைக் கொண்டதாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், முதற்கட்ட பணிகள் சுமார் 230 கோடி ரூபாய் செலவில் 3.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் சென்னை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், பிப்ரவரி 2023க்குள் பணிகள் நிறைவடையும் எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version