வல்லாரை கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

வல்லாரை கீரை 1 கப்

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 3

பூண்டு 5 பல்

பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

உப்பு சிறிதளவு

எண்ணை 1 மேஜை கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் போட்டு தாளித்து பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பெருங்காயம் போட்டு பொடியாய் நருக்கிய கீரை சேர்த்து வதக்கி பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைத்து எடுக்கவும். கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.கீறை ஆறின பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

Quantcast
Exit mobile version