இலங்கையின் சர்வதேச பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய பணவீக்கம் 20 சத வீதத்தை தாண்டி இருப்பதாகவும் இந்த அதிகரிப்பு இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 21.5 சத வீதமாக அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் பணவீக்கமானது 18.7 சத வீதமாக காணப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளமை ஆகியன காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன் அத்தியவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.