இலங்கைக்கு உடனடி நிதியுதவிவழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது

இலங்கையில் அத்தியாவசிய , மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உடனடி நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி 21. 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலிருந்து இன்று, நிகழ்நிலை (Zoom) ஊடாக நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்க தரப்பு பேச்சுக்களை நடத்திவரும் நிலையில், அந்தக் குழுவில் பங்கெடுத்துள்ள அவர் விசேட உரை வழங்கியதுடன், சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version