முட்டை மசாலா குழம்பை இப்படி செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 10,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 6,
முட்டை – 6,
சோம்பு – ஒரு ஸ்பூன்,
சீரகம் – அரை ஸ்பூன்,
மிளகு – அரை ஸ்பூன்,
பட்டை சிறிய துண்டு – ஒன்று,
ஏலக்காய் – 2,
கிராம்பு – 4,
ஸ்டார் பூ – ஒன்று,
பிரியாணி இலை – ஒன்று,
முந்திரி – 10,
எண்ணெய் – ஐந்து ஸ்பூன்,
இஞ்சி சிறிய துண்டு – ஒன்று,
பூண்டு – 5 பல்,
கருவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து,
உப்பு – ஒரு ஸ்பூன்,
தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்,
தனியா தூள் – ஒரு ஸ்பூன்,
கரம் மசாலா – அரை ஸ்பூன்,
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், 2 தக்காளி இவற்றை நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, சீரகம், மிளகு, பிரியாணி இலை, கிராம்பு, பூண்டு, இஞ்சி, ஸ்டார் பூ மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து, அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சோம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து குழைந்து வேகும் வரை நன்றாக வதக்கவேண்டும். பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு தட்டு போட்டு மூடி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு ஆறு முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, தட்டு போட்டு மூடி, அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு முட்டையாக திருப்பிவிட வேண்டும். மீண்டும் 5 நிமிடம் இப்படியே வேக விட்டு அதன் பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

Exit mobile version