வீதித் தடைகளில் பொருத்தப்பட்டுள்ள கூரிய ஆணிகள்-விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் கொழும்பை சூழவுள்ள சில வீதிகளில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற பொருள் பொருத்தப்பட்டு, அவை கறுப்பு காதிதங்களால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சங்கம் கூறியுள்ளது.

இதனால், காவல்துறை மா அதிபர், காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படையினர் எந்த நிலைமையாக இருந்தாலும் எதிர்பாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை மாத்திரமல்லாது, நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டியுள்ளது.

ஏதோ ஒரு வகையில் வன்முறையான சூழல் ஏற்பட்டால், அது நாட்டுக்கு மிக மோசமான பிரதிபலனை பெற்றுக்கொடுக்க காரணமாக அமைந்து விடும் என சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

Exit mobile version