Home தொழினுட்பம் இனி 32 பேருடன் வாட்ஸ் அப் க்ரூப் வாய்ஸ் கால்….

இனி 32 பேருடன் வாட்ஸ் அப் க்ரூப் வாய்ஸ் கால்….

0

உலகின் முன்னணி தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அப்டேட்களின் மூலம் செயலியில் புதுப்புது அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது. இந்த வரிசையில் தான், தற்போது புது அப்டேட் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் புது அப்டேட் கொண்டு ஒரே சமயத்தில் 32 பேருடன் வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் கால் பேச முடியும். முன்னதாக 2020 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் க்ரூப் வாய்ஸ் கால் அம்சத்தில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.

இது தவிர ஒரே சாட் திரெட்-இல் அதிக பயனர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி, ரி-டிசைன் செய்யப்பட்ட லொகேஷன் ஸ்டிக்கர், disappearing மெசேஜ்களை save செய்து கொள்ளும் ஆப்ஷன், அதிக எமோஜிக்கள், பிரைவசி செட்டிங்களில் அதிக ஆப்ஷன்கள் என ஏராளமான அம்சங்கள் புது பீட்டா அப்டேட்டில் வழங்கப்பட்டு உள்ளன.

வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்வோர் இனி, அதிகபட்சமாக 32 பேருடன் வாய்ஸ் கால் பேச முடியும். இதே தகவல் வாட்ஸ்அப் வலைதளத்தில் FAQ பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக இந்த அம்சத்தில் நான்கு பேருடன் வாய்ஸ் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு, பின் அந்த எண்ணிக்கை ஏப்ரல் 2020 வாக்கில் இருமடங்காக அதிகரிக்கப்பட்டது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.22.8.80 வெர்ஷனிலும், ஐ.ஓ.எஸ். 2.2.9.73 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version