ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என தான் நம்புவதாக தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உக்ரைன் மீதான மாஸ்கோ படையெடுப்பின் ஆரம்பக் கட்டத்தில் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றி, உலகை “பேரழிவின் விளிம்பிற்கு” தள்ளியது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேற்கத்திய நட்பு நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவதற்கு கீவ் நம்பியிருக்கும் போக்குவரத்து உட்கட்டமைப்பை ரஷ்யா குறிவைப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனை தொடர்ந்து ஆதரித்தால், மால்டோவாவுக்கு என்ன நடக்கும் என்பதை ரஷ்யா காட்ட முயற்சி செய்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டான்பாஸில் உள்ள சிறிய நகரமான டோரெட்ஸ்கில் உள்ள பொதுமக்கள் உயிர்வாழ போராடி வருகிறார்கள் என்றும், போரினை அவர்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.