இலங்கையில் கோட்டா கோ கோம் போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் காலி முகத்திடலில் இருக்கின்ற போராட்டக்காரர்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட இலங்கையினுடைய 10 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர்.
இந்த 10 தொழிற்சங்கங்களும் இலங்கையில் அன்றாட செயற்பாடுகளை அசைத்து பார்க்கமுடியுமான தொழிற்சங்கங்கள். இதேவேளை மேலும் 10 தொழிற்சங்கங்கள் இதனோடு இணைந்திருக்கின்றன.
அதிலே, இலங்கை புகையிரத சேவையாளர்கள் சங்கம், மின்சார பொறியாளர்கள் சங்கம், துறைமுக சேவையாளர்கள் சங்கம், அத்தியாவசிய சேவையாளர்கள் சங்கம் என பல சங்கங்கள் இதில் இணைந்திருக்கின்றன.
அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த தொழிற்சங்கங்கள் தான் தற்போது எதிராக அரசாங்கங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக முன்வந்திருப்பதுதான் அரசாங்கத்திற்கு மிக பெரிய பேரிடியாக அமைந்துள்ளது.
இதேவேளை எந்த இடைக்கால அரசாங்கம் வந்தாலும் நான் மட்டுமே பிரதமராக இருப்பேன் என மஹிந்த ராஜபக்ஷ அண்மைய நாட்களில் தெரிவித்த கருத்தாக இருந்து வருகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து அரசாங்கம் என்னை விலகினாலே தவிர நானே விலக மட்டேன் என்ற தகவலையும் மஹிந்த வெளியிட்டிருந்தார்.
அப்படி என்றால் ஜானதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டு அனுப்பவதற்காக முயற்சிக்கிறார் என்ற கேள்வியும் இதற்குள் எழுந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையே முறுகல் நிலையில் அதிகரித்து இருப்பதாகவே அனேகமான செய்தி தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
எனவே ஜனாதிபதி கையில பிரதமரின் பதவி பறிக்கப்படும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் மக்களுடைய போராட்டங்கள், தொழிற்சங்களுடைய அடையாள வேலை நிறுத்த போராட்டங்கள் மற்றும் இடைக்கால அரசாங்கம் ஒன்றுக்கான முஸ்திபு இவைகள் இந்த நாட்டினுடைய சமநிலையை இது உடைத்திருக்கிறாது. இலங்கையில் தற்போது ஒரு உறுதியான அரசாங்கம் இருக்கிறாத என்பது இப்போது கேள்வி குறியாக இருக்கிறது.
இப்படியென அரசியல் நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியமாக இருக்கலாம், ஏனைய அமைப்புகளாக இருக்கலாம் இலங்கை தொடர்பில் உதவிகளை மேற்கொள்வதற்கு முன்வருமா எப்பது மிக பெரிய கேள்வி குறி.
இலங்கைக்கு உதவிகளை வழங்கு என சர்வதேச நாணய நிதியம் தகவலை வெளியிட்டிருந்தது. இந்த உதவியின் மூலம் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார சிக்கல்களில் இருந்து ழீளெழுந்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்ற என்றே நிபுணர்கள் அறிவித்திருந்தார்கள்.
அந்த அறிவிப்புகள் அப்படி இருந்தால் கூட இலங்கை IMF நாடியமை, IMF இருந்து உதவிகளை பெற்றுக்கொண்டமை எங்களுடைய கடன் சலுகையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தகூடும் என்று சீனாவின் தூதுவரும் சீனாவும் தீடிரென அறிவித்திருக்கின்றது.
இந்த அறிவிப்பு மீண்டும் இலங்கைக்கு ஒரு பெரிய தலையிடியாக மாறியுள்ளது.
இலங்கையில் மொத்த கடன்கள் கிட்டத்தட்ட 51 பில்லியன் டொலர்கள், இதே இந்த ஆண்டு மட்டும் செலுத்த வேண்டிய கடன்கள் 7 பில்லியன் டொலர்கள். சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் 3.38 பில்லியன் டொலர்கள், இவைகளிலேயே மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும், இவ்போதைக்கும் எங்களால் கடன்களை செலுத்தமுடியாது, கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என இலங்கை தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அனோகமான நாடுகளும், அமைப்புகளும் மற்றும் வங்கிகளும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தாயார் என்று அறிவித்திருந்தாலும் கூட சீனா அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது,
சீனா உடைய Belt and Road திட்டத்திலேயே கிட்டத்தட்ட 8 நாடுகள் சீனாவினுடைய கடன்பொறிக்குள் சிக்கி பாரிய விளைவுகளை சந்தித்து வருகின்றது. இதுதவிர அதற்கு மேலதிகமாக 42 நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியிருக்கிறது.
இந்த கடனை மீள செலுத்துவதற்கு கால அவகாசம் தேவையான சீனாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், இல்லை அந்த கோரிக்கைக்கு எங்களால் பதிலளிக்க முடியாது, நாங்கள் உங்களை போன்று பல நாடுகளுக்கு கடன்களை வழங்கி இருக்கின்றோம், உங்களுக்கு சலுகையை தந்தால் அது ஏனைய நாடுகளின் விடயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தகூடும் என சீனா தெரிவித்துள்ளது.
இந்த நிலையி எங்களின் கொடுப்பதற்கு எனுமென்றால் எங்களுடைய நாடுகளின் உடைய வங்கிகளிடமிருந்து மீண்டும் நாங்கள் உங்களுக்கு கடன்களை வாங்கி தருகிறோம் என்று சீனா அறிவித்திருக்கிறது,
எனவே இந்த கடன்பொறிக்குள் இலங்கை சிக்கியிருக்கின்ற நிலையில், அதனுடைய விளைவுகள் எந்தெந்த பக்கங்களில் இலங்கையை பாதிக்கும் என்ற விடயம் தெளிவாக புரிக்கின்றது.
சீனா இலங்கைக்குள் மேற்கொள்ள்கின்ற அபிவிருத்தி திட்டங்களுடைய விளைவுகள் அபிவிருத்தி திட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற கடன்களுடைய பொறிமுறைகளினுடைய விளைவுகள் என்பதை சதாரண குடிமகன்கள் தான் இலங்கையிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.