அலரிச் செடி எல்லா இடங்களிலும் அதிகமாக காணப்படுகின்ற ஒரு வகையான அழகிய பூச்செடி ஆகும். இதில் காய்க்கும் அரளி விதை உயிரையே பறிக்கும் விஷத் தன்மை கொண்டுள்ளது என்றாலும் இதை பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படுவது ஏன்? வீட்டில் அரளிச் செடியை வளர்ப்பது சரியா? தவறா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.
அரளி செடிகளில் பல வகையான நிறங்கள் இருந்தாலும் பொன்னரளி, செவ்வரளி ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. செவ்வரளி செடிகளை நெடுஞ்சாலைகளின் நடுவில் இருக்கும் டிவைடரில் நீங்கள் அதிகம் காணக்கூடும். செவ்வரளி செடி காற்றில் பரவும் மாசுகளை அதிக அளவு இழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளதால் நெடுஞ்சாலைகளில் பறக்கும் வாகனங்களிலிருந்து வெளியிடும் புகை மாசுக்கள் கிரகித்துக் கொள்ள அரசாங்கத்தால் அதிக அளவு இவ்வாறு அரளி செடி வளர்க்க படுவது வழக்கம்.
அது போல பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் பார்த்தால் வீட்டு வாசலுக்கு முன்னே பொன்னரளி அல்லது செவ்வரளி செடி கண்டிப்பாக இருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இந்த ஆபத்து நிறைந்த செடியை வீட்டில் ஏன் விரும்பி வளர்க்கப்படுகிறது? இதில் இருக்கும் உள்ளர்த்தம் என்ன? அரளிச்செடி மாசுக்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல் கெட்ட சக்திகளை ஈர்த்து, எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து, நேர்மறை ஆற்றல்களை வெளியிடக் கூடிய சக்தி கொண்டுள்ளது.
இதனால் வீட்டில் செவ்வரளி செடி அல்லது பொன்னரளி செடி வைத்து வளர்த்து வந்தால் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது அவர்களுடைய திருஷ்டிகள் நம்மை நெருங்காது. இதனால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை, சச்சரவுகள் வராது. உங்கள் வீட்டிலிருந்து வாசலில் வந்து நின்றால் இடது புறமாக செவ்வரளி அல்லது பொன்னரளி செடி வைத்து வளர்க்க வேண்டும். வலது புறம் வைத்து வளர்த்தால் குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் தேவையற்ற சண்டை, சச்சரவுகளும், சந்தேகங்களும் வலுபெறும் என்கிற கருத்தும் நிலவுகிறது.
இதனால் செவ்வரளி மற்றும் பொன்னரளி செடியை வீட்டு வாசலில் வளர்க்கக் கூடாது என்று கூறுவது உண்டு. மேலும் திடீரென சண்டை, சச்சரவு என்றால் அரளிச்செடி நினைவுக்கு வந்து விடக் கூடாது. இதனால் அரளி செடியை பலரும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் அரளிச் செடியில் இருக்கும் ஆற்றல் துர் சக்திகளை அழிக்கக் கூடியது என்பதால் இதை முற்றிலுமாக தவிர்த்து விடாமல் பாதுகாப்பான இடத்தில், பாதுகாப்பான வேலிகள் அமைத்து வளர்த்து வருவது நலம் தரும். மேலும் அதில் இருக்கும் விதைகளை அவ்வபோது தூக்கி வீசி விடுங்கள். செடியில் இருக்கும் மலர்கள் பூத்துக் குலுங்க எப்பொழுதும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வாருங்கள்.
செடி பூத்துக் குலுங்க குலுங்க உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் குலுங்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். அரளியை வீட்டிற்கு பின்னால் வைத்து வளர்கலாமா? என்றால் தாராளமாக பின்னால் வைத்து வளர்க்கலாம். குழந்தைகளிடம் இருந்து சற்று தள்ளி இருக்குமாறு பாதுகாப்பான வேலிகள் அமைத்து வளர்த்து வருவது உசிதமானது. மேலும் அரளிச் செடியை பூஜைக்குப் பயன்படுத்தலாம். இதனால் தோஷங்கள் நீங்கும் என்கிற ஐதீகம் உண்டு. அரளிப் பூக்கள் விநாயகருக்கு மிகவும் உகந்தது எனவே விநாயகருக்கு தினமும் அரளிப்பூ சாற்றி வழிபட்டு வந்தால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உண்டு.