Home உலகம் இந்தியா திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால் மணமகனை மாற்றிய தந்தை

திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால் மணமகனை மாற்றிய தந்தை

0

இந்தியாவில் மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், தனது பெண்ணை தந்தை ஒருவர் வேறு ஒரு உறவுக்காரருக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள் கடந்த 22ம் திகதி மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை மணமகள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வருகைக்காக காத்திருந்தனர்.

எனினும் இரவு 8 மணி வரை மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதோடு , மணமகன் அவரது நண்பர்களுடன் மதுபோதையில் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து , இரவு 8 மணிக்கு மண்டபத்திற்கு மதுபோதையில் வந்த மணமகனும் அவரது நண்பர்களும் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மணப்பெண்ணின் தந்தையார் எங்கள் மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம் என கூறியுள்ளார்.

திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் வெகு நேரமாக மணமகன் வராததால், உறவினருடன் பேசி திருமணத்திற்கு வந்திருந்த வேறு ஒருவரை தனது மகளுக்கு திருமணம் தந்தை திருமண செய்துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version