நீரிழிவு நோயாளர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாமா ?

பனம் பழத்தை சாப்பிட்ட விட்டு கொட்டையால் மண்ணில் புதைத்து வைத்தால் கிடைப்பது தான் பனங்கிழங்கு.இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.தண்ணீரே ஊற்றாமல் வெறும் மழையை மட்டுமே நம்பி இந்த மரம் பல ஆண்டுகள் வறட்சியைத் தாண்டி உயிர் வாழும்.

​பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக் கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேக வைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காய வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

சத்துக்கள்

நார்ச்சத்தும் இனிப்புச்சத்தும் அதிகமுள்ளது பனங்கிழங்கு. உடலுக்கு அவசியமான வைட்டமின் பி மற்றும் சி இதில் உள்ளன.

100 கிராம் பனங்கிழங்கில்

ஆற்றல் 87 கிலோ கலோரிகள்,

1 கிராம் புரதம்,

21 கிராம் கார்போஹைட்ரேட்,

77 கிராம் நீர்ச்சத்து ஆகியவை உள்ளன.

நன்மைகள்: உடல் பருமனாக வேண்டும் என நினைப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வரலாம்.

சர்க்கரை நோயாளிகளும் கூட இதை அவ்வப்போது சாப்பிடலாம்.

மலச்சிக்கல் இருப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிடுவதன் மூலம், அதிலிருந்து விடுபடலாம்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது. உடல் உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்போக்கு போன்றவற்றைச் சரி செய்யலாம்.

​எடை அதிகரிக்க

சிலர் என்ன தான் நிறைய சாப்பிட்டாலும் உடல் தேறாமலே இருப்பார்கள். அவர்களுக்கு பனங்கிழங்கு நல்ல தீர்வாக இருக்கும்.

பனங்கிழங்கில் அதிக அளவிலான புரதமும் நார்ச்சத்தும் இருப்பது மட்டுமல்லாது, நிறைய உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

உடல் நோஞ்சானாக இருப்பவர்கள் தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய உடல் எடை அதிகரிக்கும்.

உடல் மெலிய வேண்டும் என்று நினைப்பவர்களோ உடல் பருமனாக உள்ளவர்களோ பனங்கிழங்கு சாப்பிட வேண்டும் என்றால்

ஆசைக்காக மட்டும் ஒன்றிரண்டு சாப்பிடுங்கள், நிறைய எடுத்துக் கொள்ள வேண்டாம்.

​மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் பிரச்சினை தான் நம்முடைய உடலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

மலச்சிக்கலுக்குக் காரணமும் நம்முடைய உணவுப் பழக்கம் தான். அதற்கான தீர்வும் ஆரோக்கியமான உணவு முறை தான்.

அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதால் மெட்டபாலிசம் அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சினை வராது.

பனங்கிழங்கும் அப்படித்தான். பனங்கிழங்கில் மிக அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது.

இது மலச்சிக்கலை சரி செய்து வயிற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

​அனீமியா

இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினை தான் ரத்த சோகை. உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும்.
பனங்கிழங்கு இரும்புச்சத்து அதிகமுள்ள ஒரு உணவுப் பொருள்.

ரத்த ஓட்டம் குறைவாக இருப்தே பல பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும் உண்டு.

இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த சோகை போன்ற பிரச்சினைகள் தீரும்.

நீரிழிவு நோயாளிகள்

மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளில் அதிக அளவில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரைச் சத்து இருக்கும் என்பதால்,

கிழங்கு வகைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் பனங்கிழங்கு மட்டும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.

காரணம் அதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் தான்.

அதிக அளவு நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

அதே போல பனங்கிழங்கில் உள்ள சில நுண்ணூட்டச் சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

​நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க

உடல் பலவீனமாக உள்ளவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

பனங்கிழங்கை காய வைத்து பொடி செய்து அந்த மாவை எடுத்து, காலை நேரத்தில் கூழ் அல்லது

கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் வலிமை பெறும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Exit mobile version