ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக புதிய போர்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடுமையான தாக்குதல்களை நடத்தி நாட்டை தங்கள் வசம் ஆக்கினர்.

அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

அந்த வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத், தலிபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என சூளுரைத்துள்ளார்.

முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து போருக்கு தயாராகி வருவதாகவும், அடுத்த மாதம் ரமலான் பண்டிகைக்கு பிறகு போர் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version