இலங்கையில் நாளை(04) முதல் மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கமைய கேகாலை மாவட்டத்தில் கடமையாற்றும் மருத்துவர்கள் நாளைய தினம் ஆர்ப்பாட்டங்களை நடாத்த தீர்மானித்துள்ள நிலையில் இதனை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை, ஊவா, வடக்கு, மத்திய மாகாணங்களில் கடமையாற்றும் மருத்துவர்களும் அடுத்தடுத்த தினங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சேனால் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இலங்கை – சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்புகளில் ஈடுபட்ட போதிலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மருந்து தட்டுப்பாடு, எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய உணவு தட்டுப்பாடுகள் தொடர்பாக கடந்த காலத்தில் மேற்கொண்டதை போன்ற வலுவான போராட்டங்களை இதுவரையிலும் நடத்தவில்லை என்பது நோக்கத்தக்கது.