Home இலங்கை இரு பிரதான வங்கிகள் விடுத்துள்ள தகவல்

இரு பிரதான வங்கிகள் விடுத்துள்ள தகவல்

0

இன்றைய தினம் இலங்கையில் வங்கிச்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (06-05-2022) நாடு தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்திடமிருந்து (CBEU)அறிவித்தலைப் பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கையின் இரு பிரதான வங்கிகள் தகவலை வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக, எமது (Commercial bank)வங்கி சேவைகளில் இடையூறுகள் ஏற்படலாம் எனவும் எமது வங்கி கிளைகள், அத்தியாவசிய மற்றும் அவசர வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக மு.ப் 9.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2022-ம் ஆண்டு மே 06-ம் திகதி வெள்ளிக்கிழமை அவசர மற்றும் அத்தியாவசிய வங்கி சேவைகளை வழங்குவதற்காக திறக்கப்பட்டிருக்கும் கிளைகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வதற்கு WWW.Combank.lk என்ற வலைதளத்தை பார்வையிடவும் என குறித்த வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version