Home உலகம் இந்தியா சீனாவை வெளியேற்றி யாழில் ஆழமாக கால் பதிக்கும் இந்தியா!

சீனாவை வெளியேற்றி யாழில் ஆழமாக கால் பதிக்கும் இந்தியா!

0

யாழ். தீவகத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கில் தீவகத்திற்கு இந்திய அதிகாரிகள் கள விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்.இந்திய துணை துாதுவர் ராகேஷ் நடராஜ் உள்ளிட்ட துாதரக அதிகாரிகள் நேற்றய தினம் தீவகத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை அவாதானித்தனர்.

நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய 3 முக்கிய தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனாவுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

எனினும் கடுமையான எதிர்ப்பினால் சீனா பின்வாங்கிய நிலையில் அந்த திட்டங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இந்தியா தனது பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த பணிகளுக்காக கள விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் பூநகரியிலும் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக இந்தியாவுக்கு பெருமளவு நிலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய துாதரக அதிகாரிகளின் அழைப்பின் பெயரில் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் மற்றும் தீவக பிரதேச செயலர்களும் இந்த களவியஜத்தில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version