இன்று (08-05-2022) இரவு இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaska) 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் பிரேரணையை முன்வைத்து அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றிருந்தார்.
வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, குறித்த தீர்மானம் பிற்பகலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் மீண்டும் 19ஆவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.