கடற்படை முகாமை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

தற்போது பொதுமக்கள் மஹிந்த குடும்பத்தை வெளியே அனுப்புமாறு கூறி திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதன்போது மஹிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களை முகாமில் இருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து திருகோணமலையில் உள்ள கடற்படை தலைமையகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Gallery
Exit mobile version