பாதுகாப்பற்ற இடத்தில் மகிந்த – வளைத்து பிடிக்க திட்டம்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் தங்கியுள்ளதாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது,

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் மகிந்தவின் குடும்பத்தினர் தங்கியுள்ள நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்பற்ற இடத்தில் சிக்கிக்கொண்ட மகிந்த!! சுற்றிவளைத்து பிடிக்க திட்டம்  (Photos) - ஐபிசி தமிழ்

நைஜீரியாவில் இருந்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச்செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தங்கியிருந்த மகிந்த உள்ளிட்ட குழுவினர் சோபர் தீவுக்கு சென்றுள்ளதாகவும், அந்தத் தீவு பாதுகாப்பற்றது எனவும், அங்கு சென்று அவரை இலகுவில் பிடிக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் குரல் பதிவு ஒன்று பரவி வருகிறது.

அத்தோடு நேற்றையதினம் திருகோணமலை துறைமுகம் மக்களால் முற்றுகையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version