Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-05-2022)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-05-2022)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (12-05-2022)

மேஷ ராசி

நேயர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கும். விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

ரிஷப ராசி

நேயர்களே, நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் நடக்கும். சுப செலவுகள் இருக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் முக்கிய வேலைகள் முடிவடையும். தன வரவு உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்து பகைமை நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி

நேயர்களே, திட்டமிட்ட காரியம் நடப்பதில் தாமதம் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப பிரச்சனைகள் அகலும். வெளிவட்டார புது தொடர்புகள் கிடைக்கும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைக்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, மனதில் பட்டதை தைரியமாக செய்ய முடியும். பிரபலங்கள் அறிமுகமாவர். வாகனம் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். தூர பயணங்களை புறக்கணிக்கவும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்தவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு ராசி

நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் நிலையான ஒரு சந்தோஷம் இருக்கும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பர். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி

நேயர்களே, புத்தி சாதூரியதால் எதையும் சாதிக்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

மீன ராசி

நேயர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். அடுத்தவருக்கு உதவுவதால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிடையே நல்ல ஒற்றுமை நிலவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version