திடீர் வளர்ச்சி காணும் இலங்கை ரூபா!

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 364.98 ரூபாவாகும்.

அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய விற்பனை விலை 377.49 ரூபாவாகும்.

இதற்கமைய இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 12 ரூபாவால் வீழிச்சியடைந்துள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்களுக்கு எதிராகவும் ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

திடீர் வளர்ச்சி காணும் இலங்கை ரூபா! – சரிகிறது டொலரின் பெறுமதி

இந்நிலையில் நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர், இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பங்கு சந்தையும் நேற்றைய தினம் திடீரென வளர்ச்சி நிலையை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version