இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சமூகம் அதிக நிதி உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதாக உறுதியளித்த அவர், இலங்கையில் பஞ்சம் தலைதூக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இலங்கையில் கடுமையான பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், பழைய நிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய போராடுபவர்களின் உணர்வுடன் தான் உடன்படுகின்ற போதிலும் அது நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பலனளிக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.