சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி!

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் 60 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் அமைதியின்மை மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஊடாக பிரசாரம் செய்தமைந் காரணமாகும் என அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சவாலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version