Home மருத்துவம் அற்புத மருத்துவ குணங்களையுடைய புளிச்சக்கீரை..!

அற்புத மருத்துவ குணங்களையுடைய புளிச்சக்கீரை..!

0

காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது.

புளிச்சக்கீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். புளிச்சகீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது.

புளிச்சக்கீரையானது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். புளிச்சகீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.

பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும். மந்தம், இருமல், காய்ச்சல், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை ஒரு மிக சிறந்த தீர்வாகும்.

சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள், இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version