புதிய தொழில் தொடங்க போகும் நடிகர் சித்தார்த்

தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.நடிகர் சித்தார்த் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை டுவிட்டர் மூலம் துணிச்சலுடன் எடுத்து வைக்க தயங்காதவர். இவர் எழுதிய பல கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பின.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் தான் திரைப்படத்துறையிலிருந்து விலகப்போவதாக தெரிவித்திருக்கிறார். தனக்காக நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இனியும் இப்படி தொடர்ந்தால் திரை உலகில் இருந்து விலகி தொழில் செய்யும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Exit mobile version