Home ஆன்மீகம் ராசிபன் இன்றைய நாளுக்கான ராசி பலன் (18-05-20222)

இன்றைய நாளுக்கான ராசி பலன் (18-05-20222)

0
இன்றைய நாளுக்கான ராசி பலன் (18-05-20222)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். பேச்சு திறமை அதிகரிக்கும். உறவினர்களிடம் அன்பாக இருப்பதன் மூலம் உறவு பலப்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

ரிஷப ராசி

அன்பர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். காரிய வெற்றி உண்டாகும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

அன்பர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். விஷசங்களை முன்னின்று நடத்த முடியும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். இஷ்ட தெய்வ வழிபாடு மனநிம்மதி அளிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிடையே ஏற்பட்ட பிரச்சனை தீரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி

அன்பர்களே, மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். உற்றார், உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரம் ஒரே சீராக செல்லும்.

துலாம் ராசி

அன்பர்களே, சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். பண வரவில் தாமதம் இருக்கும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். நம்பிக்கையானவர்களின் நட்பால் நன்மை உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்ப பொறுப்புகள் கூடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.

மகர ராசி

நேயர்களே, அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில்கவனம்தேவை.

கும்ப ராசி

அன்பர்களே, அண்டை அயலாரிடம் கவனமுடன் செயல்படல் நன்று. மனதில் தெளிவு பிறக்கும். புது நபர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மீன ராசி

அன்பர்களே, திட்டமிட்ட பயணங்கள் நல்லவிதமாக அமையும். முக்கிய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். திடீர் மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version