Home தொழினுட்பம் ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 அறிமுகம்

ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 அறிமுகம்

0

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர் மட்டும் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதன் விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலில் 1.69 இன்ச் 240×280 பிக்சல் கலர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் உள்ளது.

110-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கொண்டிருக்கும் ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடலில் 24 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், நோட்டிபிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர், பிளாஷ்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஹார்ட் ரேட் சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மாணிட்டர், ப்ளூடூத் 5.1, ஆட்டோமேடெட் ஹார்ட் ரேட் மெஷர்மெண்ட், SpO2 மாணிட்டர், டெம்பரேச்சர் மாணிட்டரிங், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடல் 260mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.

புதிய ரியல்மி டெக்லைப் வாட்ச் SZ100 மாடல் லேக் புளூ மற்றும் மேஜிக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 22 ஆம் தேதி ரியல்மி வலைதளம், அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் துவங்க இருக்கிறது.

Related Tags :
ரியல்மி | ஸ்மார்ட்வாட்ச்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version