Home இலங்கை ஒரு அரசியல் கைதியாக உள்ள ரணில் – நாடாளுமன்றத்தில் சாணக்கியன்!

ஒரு அரசியல் கைதியாக உள்ள ரணில் – நாடாளுமன்றத்தில் சாணக்கியன்!

0

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு அரசியல் கைதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“நான் ஏன் ரணில் விக்கிரமசிங்கவை இவ்வாறு தாக்குகின்றேன் என தமிழ் பேசும் மக்கள் இன்று பார்த்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் நான் தாக்குவதற்கான காரணம் 2019 வரை இருந்த ரணில் விக்கிரமசிங்க வேறு, தற்போது அவர் ராஜபக்‌ச குடும்பத்தை காப்பற்றுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவராக காணப்படுகின்றார்.

அவரால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. அவர் இன்று ராஜபக்‌ச குடும்பத்தினால் கைதியாகக்கப்பட்டுள்ளார். இந்த கைதியை விடுதலை செய்ய வேண்டும் அவர் இன்று தனி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ராஜபக்‌ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பிரதமர் பதவியில் உள்ளார். அதே போன்று கடந்த காலத்தில் நான் கூறியது போன்று மீண்டும் கூறுகின்றேன் கிழக்கு மாகாணத்தில் உள்ள உறுப்பினர்கள் அமைச்சு பதவி எடுத்தால் குறுகியகாலத்தில் அமைச்சு பதவி வகித்தவர்களாக இருபீர்கள்” எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version