கேரட் சாண்ட்விச் எப்படி செய்வது?

தேவையான பொருள்கள்:

கோதுமை பிரெட் – 8 துண்டுகள்

வெண்ணெய் – 50 கிராம்

கேரட் ( துருவியது) – 1

கோஸ் ( துருவியது) – அரை கிண்ணம்

பட்டாணி ( வேக வைத்தது) – அரை கிண்ணம்

இஞ்சி, பூண்டு விழுது – அரை தேக்கரண்டி

சீஸ் – 4 துண்டுகள்

மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு, கேரட், கோஸ் சேர்த்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறவும்.

பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ஆற விடவும்.

பிரெட் துண்டுகளில் வெண்ணெய் தடவவும். துண்டுகளில் இந்தக் கலவையை மேல் பரப்பவும்.

இதற்கு மேல் மீதமுள்ள நான்கு துண்டுகளை வைத்து மூடவும். முக்கோணமாக நறுக்கி பரிமாறவும். சுவையான கேரட் சாண்ட்விச் ரெடி..

Exit mobile version