எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்க எம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதிகளவான பகுதிகளில் இராணுவம் விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதேபோல் இராணுவத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகளின் போதும் இராணுவம் பாரிய சேவையை செய்ததுடன் தற்போதும் பல்வேறு நெருக்கடி நிலைமைகளில் இருந்து மக்களை மீட்கவும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மாலான சகல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும், அதற்கு எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் செய்து காட்டுவோம், எம்மால் முடியாது என்று ஒன்றுமே இல்லை.
எந்த சவால்களையும் சந்திக்க நாம் தயாராக உள்ளோம். எனினும் மக்களின் ஐக்கியமும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றார்.