எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்…

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், ஆவடி-சென்டிரல் இடையே காலை 4.25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி-சென்டிரல் (வண்டி எண்:16054) இடையே காலை 10.10 மணிக்கும், எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருப்பதி (16053) இடையே மதியம் 2.15 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 24, 25, 31-ந்தேதி, ஜூன் மாதம் 1,7,8-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

விஜயவாடா-சென்டிரல் (12711) இடையே காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக சென்டிரல்-விஜயவாடா (12712) இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கூடூரிலிருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.

பல்லவன்

காரைக்குடி-எழும்பூர் (12606) இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-மதுரை (12635) இடையே மதியம் 1.50 மணிக்கு புறப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.50 மணிக்கு இயக்கப்படும்.

பெங்களூரு-சென்டிரல் (12608) இடையே காலை 6.20 மணிக்கு இயக்கப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவை-சென்டிரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரு-சென்டிரல் (12610) இடையே அதிகாலை 5.00 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 24, 25, 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் காட்பாடி-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இன்டர்சிட்டி

சென்டிரல்-பெங்களூரு (12607) இடையே மதியம் 3.30 மணிக்கு புறப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24, 25, 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு இயக்கப்படும்.

சென்டிரல்-மைசூரு (12609) இடையே மதியம் 1.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24, 25, 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படும்.

சென்டிரல்-கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24, 25, 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.

சென்டிரல்-சாய்நகர் சீரடி (22601) இடையே காலை 10.20 மணிக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 8-ந்தேதிகளில் 2 மணி 25 நிமிடம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version