Home இலங்கை இலங்கை தொடர்பில் தென்கொரியா அந்நாட்டு பிரஜைகளுக்கு வழங்கிய அறிவிப்பு

இலங்கை தொடர்பில் தென்கொரியா அந்நாட்டு பிரஜைகளுக்கு வழங்கிய அறிவிப்பு

0

இலங்கை தொடர்பில் தென்கொரியா அந்நாட்டு பிரஜைகளுக்கு விசேட பயண ஆலோசனைகள் சிலவற்றை நேற்று (21) வழங்கியுள்ளது.

அதன்படி,இலங்கைக்கான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் இரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க அல்லது ஏற்கனவே இலங்கையில் இருந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தனது மக்களுக்கு அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version