வீடு என்பது பார்ப்பதற்கு உயிரற்ற ஒரு இடம் தான். ஆனால் அந்த வீட்டிலிருக்கும் அழகான குடும்பத்தில் அனைத்து விதமான உணர்வுகளையும் அந்த வீடு தனக்குள் அடக்கமாய் வைத்துள்ளது. இவ்வாறு ஒரு குடும்பம் என்று இருந்தால் அந்த குடும்பத்தில் சண்டை, சச்சரவு, இன்பம், துன்பம், அழுகை அனைத்தும் இருக்கும். இப்படி அனைத்து விதமான உணர்வுகளும் கலந்து இருப்பதுதான் மனித வாழ்க்கையாகும்.
ஆனால் காரணம் இல்லாமலேயே ஒரு வீட்டில் அடிக்கடி சண்டை நிகழ்வது, துயரம் நிகழ்வது இது போன்ற எதிர்மறை வினைகள் உருவாகி கொண்டிருப்பதற்கு காரணம், வீட்டில் உள்ளவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளாகவும் இருக்கலாம்.
அதனை எடுத்துச் சொன்னாலும் மூடநம்பிக்கை என்று சொல்லிவிடுவார்கள். அவ்வாறு ஒரு சிலர் மூடநம்பிக்கையாக நினைத்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற செயல்களை உங்கள் நன்மைக்காக தவிர்த்து தான் பாருங்களேன். உங்கள் குடும்பத்தில் அதன் பிறகு உண்டாகும் மாற்றங்களை நீங்களும் விரைவாக உணர்ந்து கொள்வீர்கள்.
தகவல்: 1
செல்வம் நிலைக்க, பணம் விருத்தியடைய கொடுக்கல் வாங்கல் போன்ற செயல்களை செவ்வாய்க்கிழமையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் செவ்வாய் ஓரையில் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பணம் வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் அதனை திருப்பித் தருவதற்கு பணம் மீண்டும் கிடைக்கும். யாருக்காவது பணத்தைத் திரும்ப கொடுப்பதாக இருந்தால் செவ்வாய் ஓரையில் கொடுப்பதை கடைபிடித்து பாருங்கள்
தகவல்: 2
இரவு நேரங்களில் பால், மோர், தயிர் போன்றவற்றை நமது வீட்டிலிருந்து மற்றவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது. அதேபோல் வாழை இலை, வெற்றிலை இவற்றை காய விடக்கூடாது. எப்பொழுதும் வெற்றிலையை தரையில் வைத்து விடக்கூடாது.
தகவல்: 3
அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இதுபோன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.
தகவல்: 4
ஒருவரிடம் பணம் கொடுப்பதாக இருந்தாலும் வாங்குவதாக இருந்தாலும் வாசற் படியின் மேல் நின்று வாங்கக்கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசற்படிக்கு உள்ளே அல்லது வெளியே நின்று கொண்டுதான் பணம் கொடுக்கல், வாங்கல் செயல்களை செய்ய வேண்டும்.
தகவல்: 5
வீட்டில் ஏற்றப்படும் குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு இவற்றை தானாக அனைய விடக்கூடாது. விளக்கு தானாக அனைவதற்கு முன்னதாகவே அதனை மலை ஏற்ற வேண்டும். விளக்கினை வாயால் ஊதியோ அல்லது வேறு விதமாகவோ அனைக்கக்கூடாது. புஷ்பம் வைத்து அதனை குளிர்விக்க வேண்டும். எப்போதும் விளக்கை குளிர்விக்க வேண்டும், மலை ஏற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டும். அதனை அனைக்க வேண்டுமென்று சொல்லக்கூடாது.
தகவல்: 6
வீட்டில் உள்ள பெரியவர்கள் சில நேரங்களில் குழந்தைகளை சனியனே, இழவு என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள். இது போன்ற வார்த்தைகளை எப்பொழுதும் பயன்படுத்தக்கூடாது. இவற்றை நாம் சொல்லும் பொழுது நமக்கு நாமே கெடுதல்களை வீட்டிற்குள் வரவழைப்பதாக அமைந்து விடுகிறது.