Home சினிமா பிறந்தநாளான இன்று தனது தந்தையுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற கார்த்தி…!

பிறந்தநாளான இன்று தனது தந்தையுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற கார்த்தி…!

0

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் அரசியல் கட்சியினர், திரை நட்சத்திரங்கள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

அதன் வரிசையில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளான இன்று பழனி மலைக்கோவிலில் அவருடைய தந்தை சிவக்குமாருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். வின்ச் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று விஸ்வரூப தரிசனத்திற்கு பின் வழிபாடு நடத்தினார்.

அவர்களை கண்ட பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரம் வந்த அவர்கள் கார்மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version