விவசாய திணைக்களம் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீட்டுத் தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும் என்றும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version