Home மருத்துவம் அரிய வகை மூலிகை மருந்தான திப்பிலி!

அரிய வகை மூலிகை மருந்தான திப்பிலி!

0

சளி, இருமல், இளைப்பு போன்ற நோய்களுக்கு ஆங்கில மருந்துகளைவிட இயற்கையாக கிடைக்கும் மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாரணமாகும். இதில் சளியை போக்கு இயற்கை மருந்தாக திப்பிலி பயன்படுகிறது.

திப்பிலி என்பது அரிய வகை மூலிகை மருந்து வகைகளில் ஒன்றாகும். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் எளிதாக கிடைக்கும். திப்பிலியில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்யை கொண்டுள்ளது. இது பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாக பயன்படுகிறது.

திப்பிலி மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், பித்தநீர்ப்பை நோய்கள், ஆகியவற்றை போக்க பயன்படுத்தப்படுகிறது.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்.

சளி:

திப்பிலி பொடியை எடுத்து தேனில் கலந்து இரு வேளை கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும்.

குடல்புழு:

மிளகுடன் கலந்த திப்பிலி பொடி, மயக்கம் மற்றும் உணர்வின்மையின்போது உணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுகிறது. குழந்த பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால், ரத்தப்போக்கு மற்றும் காய்ச்சல் குணமாகும். குழந்தைகளின் குடலில் உண்டாகும் புழுக்களை அகற்ற திப்பிலி பொடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், திப்பிலியை பயன்படுத்தினால் உடனே சளி நீங்கும் இதனால், எந்த பக்க விளைவும் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version