இந்த வார ராசி பலன் 30-05-2022 முதல் 05-06-2022 வரை

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் சிறப்பான பலன்களை தரக்கூடிய அற்புதமான வாரமாக இருக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட லாபம் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் அக்கறை தேவை. குடும்ப அமைதிக்காக பணிந்து போவதில் தவறில்லை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் இனிய வாரமாக அமைய இருக்கிறது. பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் எவ்வளவு எதிர்ப்புகளையும் திறமையாக சமாளிப்பீர்கள். உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படக் கூடும் என்பதால் எச்சரிக்கை உணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்க இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்கக்கூடிய ஆதாரமாக அமைய உள்ளது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்ப்புகள் சில சமயங்களில் ஏமாற்றத்தை கொடுத்துவிடும். சுய தொழிலில் இருப்பவர்கள் பணவிஷயத்தில் கவனமுடன் இருப்பது அவசியமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்களின் எண்ணிக்கை பெருகும் என்பதால் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய சிறு பிரச்சனைகளையும் உடனுக்குடன் சரிசெய்வது நல்லது.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் உங்களுடைய மனதில் புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான வாரமாக அமையும். இதுவரை தடைகளை சந்தித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தில் இனி வெற்றிவாகை சூட கூடிய நேரம் காத்திருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபம் தரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை ஆலோசிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சுவாசம் தொடர்பான பிரச்சினைக்கு வந்து மறையும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவும் என்பதால் கவனம் தேவை. தேவையற்றவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்க கூடாது. குடும்பத்தில் இருக்கும் அமைதியற்ற சூழ்நிலை மாறி குதூகலத்துடன் காணப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுய தொழிலில் நீங்கள் புதிய யுக்திகளை கையாளுவதன் மூலம் ஏற்றம் காண கூடிய அமைப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் சாதக பலன் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் பொருளாதார ரீதியான அமைப்பு சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். நண்பர்களுடன் கூட்டுத் தொழில் புரிய நினைப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டு. கணவன் மனைவியிடையே புரிதல் ஏற்படும்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் உங்கள் துன்பத்திற்கு எல்லாம் விமோசனம் கிடைக்க கூடிய நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் முடிவை நோக்கி பயணிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய முன்னேற்றம் உண்டு. உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும். கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசி பேசியே பெரிதாக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் உங்களுக்கென தனித்துவமான கொள்கைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராமல் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை சமயோசித புத்தியுடன் இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பாதி பிரச்சனையை குறைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு ரீதியான காரியங்கள் அனுகூல பலன் கொடுக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு இடையே தேவையற்ற மனசஞ்சலங்கள் வந்து செல்லும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் குறித்த நேரத்திற்குள் உங்களுடைய பணிகளை முடித்துக் கொள்வது நல்லது.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் அனுகூலப் பலன்களைக் கொடுக்கக் கூடிய இனிய வாரமாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பூர்வீக சொத்து பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். தேவையற்ற வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்து கொள்ளுங்கள்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்க போகிறது. நினைத்த இடத்தில் இருந்து பணவரவு சரளமாக இருக்கும். கொடுக்கல, வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மன கசப்புகள் மாறி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் தரும். தேவையற்ற விஷயங்களை பற்றி மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் வெற்றியை நோக்கி பயணிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறு சிறு பாதிப்புகள் குறையும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாரம் வரவைக் காட்டிலும் செலவு அதிகம் இருக்கும் என்பதால் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே தீராத மன உளைச்சல் தீரக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் இணக்கமாக செல்வது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகளில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.

Exit mobile version