இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அவுஸ்திரேலியாவில் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்றது.
அந்த நாட்டில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சியான லேபா் கட்சித் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி நாட்டின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இந்த நிலையில், 11 நாள்களுக்குப் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை தலைநகா் கான்பெராவில் புதன்கிழமை நடைபெற்றது. கவா்னா் – ஜெனரல் டேவிட் ஹா்லே அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
இந்த அமைச்சரவையில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 13 பெண்கள் இடம் பெற்றுள்ளனா். மேலும், முதல் பெண் முஸ்லிம் அமைச்சா், முதல் பூா்வக்குடி பெண் அமைச்சா் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனா்.