ரஷ்ய விமானம் தடுத்து நிறுத்தம்: பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏ330 ரக விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டமையினால் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்படவில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

விமானம் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பான நீதிமன்ற வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Exit mobile version