நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர் இந்த உரையின்போது விசேடமாக கருத்து வெளியிடவுள்ளார்.
பிரதமரின் உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதமும் நாளை மாலை வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றில் 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்
இந்த பிரேரணை மீதான விவாதம் புதன்கிழமை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் 2022.04.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ரில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டத்தின் கீழான தீர்மானமும் நாளைய அமர்வில் விவாதமின்றிய நிலையில் நிறைவேற்றப்படவுள்ளன.