இனிமேல் முகக்கவசம் கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு

நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை பயன்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணார்தன தெரிவித்துள்ளார்.

சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண முகமூடிகளை அணியலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Quantcast
Exit mobile version