Home Blog Page 227

மகளை பார்க்க முடியாமல் தவிக்கின்றேன்-நடிகை ரேகா கவலை

0

பிரபல நடிகை ரேகாவின் ஒரே மகள் அமெரிக்காவில் படித்து வந்தார். படிப்பை முடித்துக் கொண்ட பின், அவர் அங்கேயே வேலை பார்த்து வருகிறார். கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அவரால் சென்னை திரும்ப முடியவில்லை. இதுபற்றி நடிகை ரேகா கண்ணீர் மல்க கூறியதாவது:-

பலரும் பார்த்திடாத பிரபல நடிகை ரேகாவின் மகள் அனுஷாவின் புகைப்படம்! சர்வ  லட்சணமும் கொண்ட அனுஷா திரைப்படத்தில் நடிக்காதது ஏன்? அதற்கு ...

‘‘என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்துவிட்டு, இப்போது வேலையில் சேர்ந்து இருக்கிறாள். மகளை தனியே விட்டுவிட்டு, சுமார் ஒன்றரை ஆண்டாக ‘விசா’ கிடைக்காமல், நானும் என் கணவரும் கவலையுடன் இருக்கிறோம்.

என் மகள் அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே வேலை செய்வதை பார்த்து சிலர் பொறாமைப்படுகிறார்கள். நான் யார் மீதும் பொறாமைப் படுவதில்லை. எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் இந்த தலைமுறை நடிகைகளுடன் போட்டி போட முடிகிறது’’ என்றார்.

அன்டீஜன் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு…!

0

இலங்கை முழுவதும் ரெபிட் அன்டீஜன் உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டுக்கொள்வது மாத்திரமன்றி, அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சத்திர சிகிச்சைகளை கூட செய்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட ரெபிட் அன்டீஜன் உபகரணங்களை, ஔடத விநியோக பிரிவு விநியோகிக்காமையினால், இந்த நிலைபை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பு மற்றும் கண்டி ஆகிய தேசிய வைத்தியசாலைகள், இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, அம்பாறை, கராபிட்டி, பேராதனை, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பெரும்பாலான வைத்தியசாலைகளில் ரெபிட் அன்டீஜன் பரிசோதனை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெபிட் அன்டீஜன் உபகரணங்களின் ஊடாக செய்யக்கூடிய பரிசோதனைகளை PCR பரிசோதனை ஊடாக செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்த கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர்.

காணாமல்போன நீல நிற கிளிகள் கிடைத்தன..!

0

இலங்கை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன, நீல நிறத்திலான மாலையை ஒத்ததான தொண்டை பகுதியை கொண்ட கிளி, கிடைத்துள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.

களுபோவில பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், இந்த கிளியை மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைத்துள்ளனர்.களுபோவில பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர், குறித்த கிளி பறந்து வந்துள்ளதாகவும், உரிமையாளர் எவரும் வருகைத் தராமையினால் இதுவரை தாம் அந்த கிளியை பராமரித்து வந்துள்ளதாகவும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கிளி காணாமல் போனமை குறித்து, ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த கிளி மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல் போன கிளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதன்படி, மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல் போன கிளி என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கிளி கிடைக்கப் பெற்றதை அடுத்து, தெஹிவளை பொலிஸாருக்கு, மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, பொலிஸார், குறித்த தம்பதியிடம் வாக்குமூலம் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மிருகக்காட்சிசாலையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் பறந்து சென்ற மற்றுமொரு நீல நிற கிளியொன்று இரத்மலானை பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இருந்தால் மட்டுமே திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி-வெளிவந்த தகவல்

0

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கம்பஹா மாவட்ட கோவிட் குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேசமயம் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் கோவிட் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார்.

எனினும் , சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெருப்புடன் விளையாடவேண்டாம் – எச்சரித்த சீனா

0

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது சீனாவில் வரும் பெப்ரவரி 4 முதல் 20-ம் திகதி வரை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதுகிறது.

ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரபூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என்று அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது.இந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு செயலர் அன்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ‘‘பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

தாய்வான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை நிறுத்துங்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மலையக காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு !

மலையக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைக்கப்பட்டு வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன.

காசல்ரீ நீர்த்தேகத்திற்கு கரையோர நீர் போசன பிரதேசமாக காணப்படும் வனராஜா கெந்தகொலை காட்டுப்பகுதிக்கு நேற்று இரவு இனந் தெரியாதவர்களால் தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.

குறித்த காட்டுப்பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்கள் அற்றுப்போவதுடன்,சிறிய வகை உயிரினங்கள்,எமது பிரதேசத்திற்கே உரித்தான அறிய வகை தாவரங்கள் ஆகியன அழிவடையும் நிலையினை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் தொடர்ச்சியாக வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் இந்நிலை மேலும் அதிகரித்து நீரின்றி பல்வேறு பிரச்சினைக்கள் நேரிடலாம் என பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுக்கின்றன. இதே நேரம் நீர் போசனை பிரதேசங்களில் உள்ள காட்டுப்பகுதிக்கு தீ வைப்பதனால் தேசிய மின் உற்பத்திப் பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்;. காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்கும் பொழுது போக்குக்காகவும் காட்டுப்பகுதிகளுக்கு சில விசமிகளால் தீ வைக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை வனப்பகுதிகளை இவ்வாறான விசமிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி;16 பேர் காயம்

0

இன்று(28) காலை இலங்கையில் ஹட்டன் – டிக்கோயா சலங்கை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு வழிவிட முற்பட்ட போதே, குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் 17 பேர் பயணித்த நிலையில், 16 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டனில் இலங்கையர் கடந்த வருடம் கொல்லப்பட்டார்-வெளியாகிய தகவல்

0

லண்டனில் கடந்த வருடம் இலங்கையர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி 6.55 மணியளவில் டவர் ஹேம்லெட்ஸ் கல்லறை பூங்காவில் இலங்கையரான ரஞ்சித் என்பவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது 11 முறை அவரது தலையில் சுத்தியலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே மரணத்திற்கு காரணமென பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படுபவர் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார். அன்றையதினம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது !

இந்தியா இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சனைக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளது.

அந்த வகையில் 500 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க, இந்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் வழங்கப்படும் டொலர் மூலம் மின் தடையை நீக்க முடியும் எனவும், மார்ச் மாதம் வரைக்கான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்

இலங்கை எதிர் நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடியை குறைக்க ஆலோசனை !

0

இலங்கை சர்வதேச பிணைமுறி கடனை திருப்பிச் செலுத்துவதை தாமதப்படுத்துவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ (Basil Rajapaks) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை பெறுவதற்கு அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கான அனைத்து வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்துவருவதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஜஸ கூறியுள்ளார்.

மீண்டும் செலுத்த வேண்டிய சர்வதேச பிணைமுறி பத்திரங்கள் உள்ளன. எனவே நாங்கள் அவர்களுடன் பேச்சு நடத்திவருகின்றோம். அதனை விட எங்களிடம் கடன் வழங்கியவர்களும் உள்ளனர்.

அவர்களின் கடன்களை நாம் மீளச் செலுத்த வேண்டும். அதனால் சில விடயங்களில் மாற்றங்களை செய்ய முடியுமா என்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம் என பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் குறித்து அரசாங்கம் சிந்திக்கும் எனவும் அனைத்து விடயங்கள் தொடர்பான பேச்சுக்களும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான நிதி உதவியை பெறப் போவதில்லை என அரசாங்கம் கூறியிருந்த நிலையில், பசில் ராஜபக்ஸவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் முன்மொழியும் என எதிர்பார்க்கப்படும் முன் நிபந்தனைகளுக்கு அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எதிராக கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

எவ்வாறாயினும் அரசாங்கம் கோரும் பட்சத்தில் கடனுதவிகளை வழங்குவது தொடர்பில் பேச்சு நடத்த தாம் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான அதிகாரி மசாஹிரோ நோசாக்கி கடந்த மாதம் கூறியிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version