Home Blog Page 8

முப்படைகளை களத்தில் இறங்கவுள்ள வட மாகாண ஆளுநர்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்கு முப்படையினர் உள்ளிட்ட தரப்பினரை இணைத்து வேலை செய்யப்போவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.

யாழ்.கைதடிப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட தொகுதியில் இன்று (02-06-2022) காலை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அரச உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலையில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று உள்ளூர் உற்பத்தி துறையை தொழில் துறையாக மாற்ற வேண்டும். குறிப்பாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, உப்பளம் உள்ளிட்ட விடயங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் பிரிந்து வேலை செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

அத்துடன் முப்படைகளையும் இணைந்து இந்த வேலைகள் நடைபெறும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார்.

சுட்டுக் கொலை செய்யபட்ட லொறியில் சென்ற நபர்

யாழ். பேருவளை மொரகல்ல – மருதானை வீதியில் லொறியில் சென்ற ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர் லொறியில் சென்று இளநீர் சேகரிப்பர் என தெரியவந்துள்ளது.

மருதானை, பேருவளை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இனி சமோசா செய்ய அப்பளம் போதுமே

தேவையானவை:

அப்பளம் – 10,

காய்கறி பொரியல் – 50 கிராம்,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து பாதியாக கட் செய்து, ஒரு பாதியின் இரு முனை களையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி கோன் வடிவத்தில் செய்யவும்.

இதில் காய்கறி பொரியலை வைத்து, ஓரங்களை அழுத்தி ஒட்டி விடவும். இதே போல் எல்லா வற்றையும் செய்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

விஜேதாஸ ராஜபக்ஷவுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல்!

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையே நேற்று இலங்கை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு உதவுவதன் முக்கியத்துவம் குறித்து, கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்களை பலப்படுத்துவதன்மூலம். இலங்கையில் ஜனநாயகம் பலமடைவதாக அமெரிக்க தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், இலங்கைக்கான சீன தூதுவர் ஸி சென்ஹொங், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நோய்களை அண்டவிடாத கரிசலாங்கண்ணி மூலிகை!

நீர்வளம் மிகுந்த இடங்களில் மஞ்சள் கரிசலாங்கண்ணி வளரும். பெரும்பாலும் வீடுகளில் அழகிற்காகவும் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.

தங்கச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘ஏ’ ஆகிய மூன்றும் ஒரு சேர சேர்ந்த மூலிகை தான் இது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் தங்கச்சத்து இருப்பதால், 6 மாதம் பயன்படுத்தினால் உடல் நிறம் தகதகவென்று மாறும்.

கரிசலாங்கண்ணி மூலிகையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு 2, ஏலக்காய் 1 இவற்றை பொடி செய்து கால் தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியுடன் கலந்தால் ஒரு கிளாஸ் டீத்தூள் தயார். இந்த பொடியுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்தால் மூலிகை டீ தயார்.

விருப்பப்பட்டால் பால் சேர்த்து கொள்ளலாம். கரிசலாங்கண்ணி பொடியுடன் தூதுவளை பொடியையும் சேர்த்து மூலிகை டீ தயாரிக்கலாம். இந்த டீயை குடித்தால் பருவ காலங்களில் வரக்கூடிய தொற்று நோய்கள் அணுகாது.

மெல்லிய வெள்ளை துணியில் கரிசலாங்கண்ணி பொடியை கட்டி, ஒரு பாத்திரத்தில் துணியில் கட்டிய பொடி மூழ்கும் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் காயவையுங்கள். எண்ணெய் கறுப்பு நிறமாக மாறும். இதைத்தொடர்ந்து தலையில் தடவி வர, இளநரை மாறி முடி கருப்பாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் மறதி, ரத்தசோகை, இளநரை, கண் குறைபாடுகள், பல் நோய்கள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, சிறுநீர்க்கோளாறுகள், ரத்த அழுத்தம், மது அடிமைத்தனம், புகையிலை பழக்கம், தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெட்டை நோய், ஊளைச்சதை, கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை உள்பட பல நோய்களை கரிசலாங்கண்ணி மூலிகை குணப்படுத்தும்.

பல ஆண்டுகளுக்கு முன் குல தெய்வமாக வழிபடப்பட்ட மூதேவி தரித்திரத்தின் அடையாளமாக மாறியது எப்படி? மறைக்கப்பட்ட வரலாறு!

இதை படித்து முடிக்கும் போது‌ இனி யாரையும் உங்க வாயால மூதேவின்னு திட்டவே மாட்டீங்க. நம்முடைய தமிழர்களின் மூத்த தாய் தெய்வம் தான் இந்த மூதேவி என்பது எத்தனை பேருக்கு தெரியும். வீட்டில் ஸ்ரீதேவி தான் குடியிருக்க வேண்டும்.

மகாலட்சுமி தான் குடியிருக்க வேண்டும் மகாலட்சுமிக்கு மூத்தவளான இந்த மூதேவியை வீட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம்முடைய எல்லோர் மனதிலும் இப்போது ஆழமாக பதிந்து இருக்கின்றது.

இந்த மூத்த தாய், மூத்த தேவி, மூதேவியை பற்றி நாம் அறியாத சில சுவாரஸ்யமான வரலாற்று கதையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த உலகத்தில் வாழ்ந்த மக்கள் யாரை கடவுளாக நினைத்து வழிபாடு செய்து வந்தார்கள். இந்த உலகத்தில் தோன்றிய முதல் கடவுள் யாராக இருக்கக்கூடும். என்ற பல தேடல்கள் இன்றளவும் இருந்து கொண்டுதான் வருகின்றது. ஆனால் அதற்கான விடையை யாரும் சரியாக கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பட்ட சில தகவல்கள் உள்ளன.

நம்முடைய மூத்த குடிமக்கள், இந்த மூதேவியை தங்களுடைய குல தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வந்ததாக சில ஆராய்ச்சிக் குறிப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தவ்வை, ஜேஷ்டா தேவி, காக்கை கொடியோள், மஹா நித்திரை, ஏக வேணி, தூம்ர காளி இப்படி பல தமிழ் பெயர்களால் அழைக்கப்பட்டவள் தான் இந்த மூதேவி.

மூத்த தெய்வம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி மூதேவி என்ற பெயரை அடைந்துவிட்டது. ஸ்ரீதேவிக்கு மூத்த அக்கா தான் இந்த மூதேவி. இது பல பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பல்லவர்கள் இந்த மூத்த தேவியை குல தெய்வமாக நினைத்து வழிபாடு செய்து வந்துள்ளார்கள்.

பல்லவர்களுக்கு அடுத்து தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ அரசர்களும் இந்த மூத்த தேவிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தது சில கல்வெட்டு குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோடு மட்டும் இல்லைங்க, இந்த மூத்த தேவியை, அதாவது மூதேவியை தவ்வை என்ற பெயரில் ஔவையாரும் திருவள்ளுவரும் தங்களுடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவுகூற வேண்டும்.

ஸ்ரீதேவி மக்களுக்கு தேவையான செல்வத்தை கொடுப்பதற்குப் படைக்கப்பட்டதாகவும், மூதேவி வீட்டிலிருக்கும் வறுமையை அடித்து விரட்டுவதற்கு படைக்கப்பட்டதாகவும் நம் முன்னோர்களால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ஒரு வீட்டில் இருப்பவர்கள் சோம்பேறித்தனமாக உள்ளார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இந்த வீட்டில் மூதேவி குடி இருப்பார்கள் என்பது நம் அனைவரது கருத்து.

ஆனால் இப்படி சோம்பேறித்தனமாக கெட்ட எண்ணத்தோடு வாழ்பவர்களுடைய வீட்டில் மூதேவி குடியேறி, அவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்து, வாழ்க்கையில் எது நல்லது கெட்டது என்பதை புரிய வைத்து அந்த வீட்டிலிருக்கும் தரித்திரத்தை மூதேவி தன்னுடனே வெளியே எடுத்துச் சென்று விடுவாள். இந்த மூதேவி வெளியே சென்ற பிறகு, மூதேவியின் தங்கை ஸ்ரீதேவி அந்த வீட்டுக்குள் நுழைவாள்.

பீடை பிடித்த தரித்திரம் பிடித்த வீட்டில் மூதேவி குடி கொள்வாள். அந்த வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்கக்கூடிய வேலையைதான் இந்த மூதேவி பார்த்துக்கொள்வாள். இவ்வளவு சொல்லியும் மூதேவியை கடவுளாக உங்களால் நம்ப முடியவில்லையா? உங்களை நம்ப வைக்க இன்னும் சில ஆதாரங்கள் இதோ.

என்னைப்பார் யோகம் வரும் என்று எதற்காக கழுதை படத்தை மாட்டி வைத்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. வேறு ஏதாவது விலங்கினத்தின் படத்தை மாட்டி வைத்திருக்கலாமே. மூதேவி அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து தான் வருவார்கள். இதனால்தான் இந்த கழுதை படத்தை எல்லோர் வீட்டிலும் மாட்டி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பொதி சுமப்பது தான் கழுதை. குறிப்பாக துணி வெளுப்பவர்கள் தான் இந்த கழுதையை, துணி பொதி சுமப்பதற்காக பயன்படுத்தி வருவார்கள். அழுக்கை, வெள்ளையாக்குவது தான் துணி வெளுப்பவர்களின் வேலை. இதே போல் தான் மனிதர்களின் மனதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக்கூடிய வேலையை இந்த மூதேவி செய்கின்றாள்.

ஆனால் காலப்போக்கில் மூதேவி என்ற பெயரைக் கேட்டாலே வீட்டில் தரித்திரம் பிடிக்கும், வறுமை வரும் என்ற எண்ணம் நமக்கு வந்ததற்கு காரணம் தான் என்ன. நெற்கதிர்கள் ஸ்ரீதேவி என்றும் நெற்கதிர்கள் விளைவதற்கு கறுப்பு நிறத்தில் உரமாக இருக்கக் கூடியதை மூதேவி என்றும் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது அழுக்கு படிந்த கருப்பான உரத்தை மூதேவிக்கு இணையாக சொன்னதால், மூதேவி அழுக்குப் படிந்த சுத்தம் இல்லாத ஒரு தெய்வம் என்று மக்களுடைய மனதில் பதிய தொடங்கியது.

காலப்போக்கில் அதுவே இந்த மூத்த தேவியை மூதேவி ஆக மாற்றுவதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. மூத்த தேவியாக பட்டவள் என்றைக்குமே நமக்கு கஷ்டங்களை கொடுப்பவள் அல்ல. நம்மிடத்தில் இருக்கும் கெடுதலை நம்மிடத்தில் இருந்து வெளியே விரட்டி அடிப்பவள் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இனி யாரையாவது பார்த்து மூதேவி என்று திட்டுவதற்கு முன் கட்டாயம் சிந்திப்பீர்கள்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (03-06-2022)

மேஷம்:

அசுவினி: இன்று முற்பகலில் செயல்களில் வெற்றி காண்பீர்கள். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும்.
பரணி: இன்று காலையில் நல்ல தகவல் வரும். மதியத்திற்கு மேல் முயற்சிகளில் இழுபறி உண்டாகும்.
கார்த்திகை 1: மதியத்திற்கு மேல் மனம் தடுமாறும். தேவையில்லாத சிந்தனைகள் மேலோங்கும்.

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4: இன்று மதியத்திற்கு மேல் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்தவற்றில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: இரண்டு நாளாக இருந்த சிரமம் இன்று விலகும். முயற்சிகள் மதியத்திற்கு மேல் வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1, 2: வேகமாக செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: இன்று காலையில் இருந்த உற்சாகம் மதியம் மறையும். சிந்தித்து செயல்படுங்கள்.
திருவாதிரை: தொழிலில் லாபம் ஓரளவே இருக்கும். புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பது நல்லது.
புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். மனதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

கடகம் :

புனர்பூசம் 1, 2, 3: முயற்சிகள் வெற்றியடைவதால் நிம்மதி உண்டாகும். குருவருளால் நினைப்பது நிறைவேறும்.
பூசம்: திறமை இன்று வெளிப்படும். பேச்சாற்றலால் வழக்கு வெற்றியாகும். விஐபிகளின் ஆதரவு உண்டாகும்.
ஆயில்யம் அலட்சியம் செய்தவர்கள் இன்று உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

சிம்மம் :

மகம்: செலவுகள் அதிகரிக்கும். இருப்பதைக் கொண்டு பொன் பொருள் வாங்க திட்டமிடுவீர்கள்.
பூரம்: குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். மனை, வாகனம் வாங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவர்.
உத்திரம் 1: சந்தோஷம், நிம்மதி என உங்கள் எண்ணம் செல்லும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.
அஸ்தம்: தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தினரின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
சித்திரை 1, 2: மறுமண வாய்ப்புகள் தேடி வரும். வருமானத்தால் உங்களுடைய சங்கடங்கள் விலகும்.

துலாம்:

சித்திரை 3, 4: குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். சுயதொழில் செய்யும் எண்ணம் ஏற்படும்
சுவாதி: மறைமுகத் தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
விசாகம் 1, 2, 3: செயலில் தெளிவு இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டு செயலில் வெற்றி காண்பீர்கள்.

விருச்சிகம் :

விசாகம் 4: இரண்டு நாளாக இருந்த சங்கடம் விலகும். உங்கள் செயல்கள் இன்று வெற்றியாகும்.
அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் மறையும். சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். யோகமான நாள்.
கேட்டை: தொல்லை விலகி நன்மை காண்பீர்கள். முயற்சியில் இருந்த தடை விலகும். முன்னேற்றமான நாள்.

தனுசு :

மூலம்: செயல்களில் இன்று குழப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த ஒன்றில் இழுபறி உண்டாகும்.
பூராடம்: பழைய பிரச்னை ஒன்று இன்று மீண்டும் தலையெடுக்கும். சங்கடத்திற்கு ஆளாகலாம்.
உத்திராடம் 1: பயணத்தில் தடை உண்டாகும் முயற்சிகளிலும் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
திருவோணம்: உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் நடந்தேறும். எதிர்பார்த்திருந்த ஒன்று இன்று கிடைக்கும்.
அவிட்டம் 1, 2: கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்ப நலனில் கவனம் செல்லும்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
சதயம்: நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும்.
பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
சதயம்: நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும்.
பூரட்டாதி 1, 2, 3: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மீனம் :

பூரட்டாதி 4: வேலையில் நெருக்கடி நீடித்தாலும் எதிர்பார்த்தவற்றில் மகிழ்ச்சி காண்பீர்கள். பணவரவு உண்டு.
உத்திரட்டாதி: பிள்ளைகள்வழியில் செலவு கூடும். பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு செல்ல நேரிடலாம்.
ரேவதி: பணியில் தொய்வு ஏற்படலாம். இன்று நிறைவேறும் என நினைத்த முயற்சி தள்ளிப் போகும்.

நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்பு

இன்று மாலை வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அத்துடன் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு மாணவர்களும் இணைந்து தமது வளர்ப்பு நாயை குளிப்பாட்டி நீராடிக் கொண்டிருந்தபோது நால்வரும் நீரில் முழ்கியதில் இருவர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஏனைய இருவரும் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அயலவர்களின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இரு மாணவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த 15 மற்றும் 16 வயதான இரு மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் நாளை முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் மூடப்படும்

இலங்கையில் நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும், ஜூன் 03 முதல் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள வளப்பற்றாக்குறையில் அரச செலவினங்களைக் குறைப்பதற்காகவும், அரச நிறுவனங்களின் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்காகவும் வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதகவும் அவர் கூறினார்.

எனவே, வெள்ளிக்கிழமையன்று பொதுமக்கள் அரச அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

லசித் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் கிடைத்த புதிய பதவி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார்.

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

லசித் மலிங்க இந்த வருட ஐபிஎல்லில் ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணி இறுதியாட்டாம் வரை முன்னேறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Exit mobile version